பிராய்டு


1. வலிமையான ஒரு கருத்திற்கு பிரதிநிதிகளாக நிற்கும் வரை மனிதர்கள் வலிமையானவர்கள். அதனை எதிர்க்கும்போது சக்தி குன்றியவர்களாகி விடுவார்கள்.

ஹோம்கின்ஸ்


1. அளவில்லாத சோதனைகளை தாங்கி சாதனை படைக்கிறவன் தான் மேதை.

மாத்யூஸ்


1. தன்னந்தனியே எவன் ஒருவன் நிற்க துணிகிறானோ. அவனே உலகில் வலிமைமிக்க மனிதன்.

டீச்சர்


1. அன்னையின் இதயமே குழந்தையின் பள்ளிக்கூடம்.

தாமஸ் புல்லர்


1. தன் கால்களால் பறவைகள் வலையில் சிக்கிக் கொள்ளும். தன் நாவால் மனிதன் துன்பத்தில் சிக்கிக்கொள்வான்.

டால்ஸ்டாய்


1. எந்த தொழிலும் இழிவு இல்லை. தொழில் எதுவும் செய்யாதிருப்பது தான் இழிவு.
2. எதிர்காலத்தை பற்றி நினைத்துக் கொண்டிராமல் நிகழ்காலத்தை நல்வகையில் பயன்படுத்தும் மனிதனே மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்.

ஸ்டோன்


1. நல்ல யோசனை தோன்றும் போது, அதை உடனே செய்து முடியுங்கள்; வெற்றி உங்கள் பக்கம்.

ஜேம்ஸ் ஹோபெல்


1. பகைவனின் புன் சிரிப்பை விட நண்பனின் கோபம் மேலானது.

காந்தி

காந்தி








1. உயர்ந்த எண்ணங்களை உடையோர் ஒரு நாளும் துன்பம் அடையார்.

போவீ


1. அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும்.

தோரோ


1. உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள்; பிறகு உலகமே உங்கள் வசமாகும்.

இங்கர்சால்


1. நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும்.
2. மனிதனின் அதிர்ஷ்டம் அவன் நடத்தையில் தான் இருக்கிறது.
3. மனிதன் ஒரு உண்மையை கண்டுபிடித்தான் என்றால் வாழ்க்கையில் ஒரு தீபத்தை ஏற்றினான் என்று பொருள்.

நார்மன் வின்சென்ட்


1.நல்ல நம்பிக்கையே நிம்மதியை அளிக்கும்.

ராஜாஜி


1. ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக்கொண்ட பிறகு பின் வாங்க கூடாது.

கார்ல் மார்க்ஸ்


1. உழைப்பு தான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம்.
2. பொறுமை இல்லாதவர்கள் நீதிமான்களாக இருக்க முடியாது.

சேத்ரஞ்சா


1. மனிதர்களிடம் கருணை காட்டாதவர்களுக்கு இறைவனும் கருணை காட்டுவதில்லை.

டிஸ்ரேலி


1. சாதுரியம் இல்லாமல் நீங்கள் எதையும் கற்றுக்கொள்ள முடியாது.

மில்டன்


1. கடினமான வேலையை செய்து முடிப்பவர்கள் தான் வீரர்கள்.

கன்பூஷியஸ்


1. தன்னடக்கமே வலிமை; அமைதியே ஆற்றல்.
2. விழுந்தாலும் அருவியாய் விழுங்கள், எழுந்தாலும் இமயமாய் நிமிர்ந்து நில்லுங்கள்!

ஸ்டாலின்


1. உலகில் உள்ள எல்லா சக்தியாலும் தகர்க்க முடியாத சக்தி ஒன்று உள்ளது. அதுவே மனிதனுடைய மனோசக்தி.