பஞ்ச்


ரஜினிகாந்த்









1. கண்ணா... குடும்பம் கோயிலாய் இருக்கணும்னா... பெத்தவங்கள பிள்ளைகள் தெய்வமா வணங்கணும். பெத்தவங்களும் பிள்ளைகள பக்தர்களா மதிக்கணும்!

2. மனத்தைப் பக்குவப்படுத்தாதவனும் பணத்தைப் பத்திரப்படுத்தாதவனும் ஒருக்காலும் உருப்படவே முடியாது!

3. யானை, கீழே விழுந்தா... அதால சீக்கிரம் எந்திரிக்க முடியாது. ஆனா, குதிரை விழுந்தா டப்புனு எந்திரிச்சு முன்னைவிட வேகமா ஓடும். நான் குதிரை. சட்னு எந்திரிச்சு ஓடிக்கிட்டே இருப்பேன்!

4. யோசிக்காம எல்லோரையும் நேசி. வாழ்க்கை ரொம்ப ஈசி.

5. கண்ணா, என்னை கைதட்டி கூப்பிட்டா ஆட்டோ மாதிரி வருவேன்... கைநீட்டி பேசுனா தோட்டா மாதிரி சீறிடுவேன் ஜாக்கிரதை.

6. நாம மக்களைப் புரிஞ்சிக்கிட்டா தலைவன் ஆகலாம். நம்மை மக்கள் புரிஞ்சிக்கிட்டா... மனிதன் ஆகலாம்!

7. தீமையை நினைக்காத மனிதன் இல்ல; தீமையை மட்டுமே நினைக்கிறவன் மனிதனே இல்ல.

8. கண்ணா, நாலு பேருக்கு உன்னை பிடிச்சுப் போனா, நீ பிரபலம்... பிடிக்காம போனா நீதான் பிராப்ளம்.

9. கண்ணா, நான் மக்களுக்காக நடிக்கிறவன், ஆனா, மக்கள்கிட்ட நடிக்கிறவன் இல்ல.

10. எரிமலையை மிதிச்சவனுமில்லை – இந்தக் கோச்சடையானை ஜெயிச்சவனுமில்லை.

11. கெட்டத, கேட்ட உடனே மறக்கணும், நல்லத நாலு பேர்கிட்டயாவது சொல்லணும்!

12. கண்ணா’ன்னா காணிக்கை கொடுப்பேன்; ‘மன்னா’ன்னா மாணிக்கம் கொடுப்பேன்; ‘என்னா’ன்னு எதிர்த்தா ஏறி மிதிப்பேன்!

13. செத்துப் பிழைச்சது சாதனை இல்லேப்பா. பிழைச்சு என்ன செய்றோம்கிறதுதான் சாதனையே.

14. கண்ணா, என் கண்ணைப் பாரு தெரியும் ஃபயரு! உன் கண்ணைப் பார்த்தா தெரியுது ஃபியரு!

15. கண்ணா, வெற்றிங்கறது 100வது படியிலயும் இருக்கலாம். தோல்விங்கற 99 படியிலயும் ஏறிதான் ஆகணும்!

16. சாகும்போதுதான் தனியா போகணும்; வாழும்போது சேர்ந்துதான் வாழணும்!

17. கெட்டவனுக்குக்கூட நல்லது செய். அது தப்பில்லே! நல்லவனுக்கு மட்டும் கெடுதல் பண்ணாதே. அது தர்மமல்ல!

18. கண்ணா.. பணம், புகழ், கௌரவம் எல்லாம் அதிகமா இருந்தா.. உன்னோட நிம்மதி, சுதந்திரம் எல்லாம் குறைவாத்தான் இருக்கும்!

19. யானையாப் பொறந்தா அங்குசத்துக்குக் கட்டுப்படணும்; மனுஷனாப் பொறந்தா அன்பு, பாசத்துக்குக் கட்டுப்படணும்!

20. இமயமலையைத் தேடிப் போகிறவன் ஞானி. இதயமே இல்லாம வாழறவன் பேமானி!

21. கண்ணா, நான் நல்லவர்களுக்குத் தூண்டிலாக மாட்டேன். கெட்டவர்களுக்கு கேன்டில் ஆகமாட்டேன்!

22. கண்ணா.. அன்பு வச்சா நான் அமைதி... வம்பு செஞ்சா நீ சமாதி!

23. செய்த உதவியை வெளியே சொன்னா உதவிக்கு மதிப்பில்லை. செய்யப் போற உதவியை வெளியே சொன்னா உதவுறதிலே அர்த்தமில்லை!

24. கண்ணா, நூறு ஆண்டு வாழப்போறது மாதிரி சிந்திக்கணும். ஆனா, நாளையே சாகப்போறது மாதிரி உழைக்கணும்... என்ன புரியுதா!

25. கண்ணா, ஒண்ணத் தெரிஞ்சுக்கோ... தெரிஞ்ச வேலையை விட்டவனும் கெட்டான். தெரியாத வேலையைத் தொட்டவனும் கெட்டான்.

26. கண்ணா! பணம் இருந்தா எதையும் வாங்கலாம்... மனம் இருந்தால் எதையும் கொடுக்கலாம்!

27. உன் சக்தியை மீறி எதையும் செய்யாத; அப்புறமா எனக்கு சக்தியே இல்லைன்னு புலம்பாத...

28. மனுஷனுக்கு பயப்படுறவன்தான் கடவுளை தேடிப் போகணும்; மனசாட்சிக்கு பயப்படுறவனை அந்தக் கடவுளே தேடி வருவார்!

29. அன்பு வைத்தால் வாழ வைப்பான்! வம்பு செய்தால் வாளை வைப்பான் இந்த கோச்சடையான்!

30. கண்ணா! என்கிட்ட தேவைக்காக மட்டும் பேசறதும் பிடிக்காது, தேவையில்லாம பேசறதும் பிடிக்காது.

31. கண்ணா... பணம், புகழ் எல்லோருக்கும் வரும். படுத்தவுடன் உறக்கம் வருமா? இது எப்படி இருக்கு?

32. கண்ணுல கண்ணீர் வந்தா அது தூசியால மட்டும்தான் இருக்கணும். காசால இருக்கக்கூடாது.

33. கண்ணா உயரம்னா, ‘எவரெஸ்ட்’ உயரணும்னா, ‘நெவர் ரெஸ்ட்!

34. கண்ணா... தியானம் பண்ணினா மனசுக்கு நல்லது... தானம் பண்ணினா மனுஷனுக்கு நல்லது!