வாட்சன் ஸ்மித்


1. பலரை அழ வைக்கும் உண்மையைவிட, சிலரை சிரிக்க வைக்கும் பொய் மேலானது.

ஹிட்லர்


1. வாழ்க்கையில் தடுமாறிக்கொண்டு இருப்பதை விட, ஒருமுறை விழுந்து எழுவது நல்லது.

லெனின்


1. எத்தனை துன்பங்கள் வந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும் எனக்குக் கவலை இல்லை. ஏனென்றால் நான் 100 முறை ஜெயித்தவன் இல்லை, 1000 முறை தோற்றவன்.

கால்டுவெல்


1. ஓய்வு பெறும் முன்னால் சேமித்து வை, இறக்கும் முன்னால் தானம் செய்.

கதே


1. நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது என்பது சுலபம் ஆனால் உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பது தான் கடினம்.

வால்டேர்


1. உலகத்திற்கு நீ வழங்குவது அதிகமாகவும், உலகிடமிருந்து நீ ஏற்பது குறைவாகவும் இருக்கட்டும்..
2. அதிர்ஷ்டம் என்பது அர்த்தமற்ற சொல். காரணமில்லாமல் எதுவும் இருக்க முடியாது.

கோல்டுஸ்மித்


1. எப்போதும் அச்சத்தில் இருப்பதைவிட ஆபத்தை ஒரு முறை சந்திப்பது மேல்.

ஆஸ்கர் ஒயில்டு


1. தனியறையில் செய்யும் ஒவ்வொரு ரகசிய தவறுக்கும் என்றாவது ஒருநாள் கூரை மேலிருந்து கதறியழ நேரிடும்.

ஜீவா


1. பட்டப்படிப்பு புட்டிப்பால் போன்றது. சிந்தனை பசும்பால் போன்றது. அனுபவம் தாய்ப்பால் போன்றது.

செனகா


1. ஒரு காரியம் கஷ்டமாக இருப்பதால் நாம் பயப்படுவதில்லை. நாம் பயப்படுவதால்தான் அது கஷ்டமாகிறது.

கண்ணதாசன்


1. குற்றம் புரிந்தவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். குற்றத்திற்கு ஆட்பட்டவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். யாருக்கு அதை வழங்குவது என்பதை பணம் தான் முடிவு செய்கிறது.
2. சோதனை அதிகமாக இருந்தால், சுகம் பெரிய அளவில் வரப் போகிறது என்று அர்த்தம்.

எமெர்சன்


1. நான் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் என்னை விட உயர்ந்தவராகவே இருக்கிறார்கள். அதை நான் கற்றுக்கொள்கிறேன்.
2. யாரிடம் உன் எண்ணங்களை வெளிப்படையாக சொல்ல முடியுமோ, அவனே உன் உண்மையான நண்பன்.

சாக்ரடீஸ்


1. உலகை மாற்ற நினைப்பவன் முதலில் தன்னைத் தானே மாற்றிக் கொள்ள வேண்டும்.
2. இப்போது செய்வதைவிட இன்னும் சிறப்பாக பணியாற்றும் சிறப்பும் வாய்ப்பும் இருந்தும் அப்படி செய்யாமல் இருப்பவனும் சோம்பேறியே.
3. நாம் மற்றவருக்கு சிந்திக்க செய்யவே முடியும். கற்பிக்க முடியாது. அவரவர் அனுபவமே சிறந்த ஆசான்.

அரிஸ்டாட்டில்


1. கல்விக்கான வேர்கள் கசப்பாக இருந்தாலும் அதன் கனிகள் இனிப்பானவை.
2. வாழ்க்கையில் எதிர்ப்படும் துன்பங்களை எதிர்கொள்வதற்கு நண்பர்களே உற்ற துணையாவர்.

அபிரகாம் லிங்கன்


1. ஏமாற்றுவதைக் காட்டிலும் தோற்றுப்போவது மரியாதைக்குரியது.

ஜான் கீட்ஸ்


1. அனுபவிக்கும் வரை எதுவும் உண்மையாகாது.

ஜார்ஜ் எலியட்


1. மரியாதையாகப் பேசுவதும், நடப்பதும் செல்லவில்லாத செல்வங்கள்.

பிராங்ளின்


1. விருப்பங்கள் அரை மடங்கு அதிகமானால் சங்கடங்கள் இரு மடங்காகும்.
2. முட்டாளின் இதயம் அவன் வாயில் இருக்கிறது, அறிவாளியின் வாய் அவன் இதயத்தில் இருக்கிறது.
3. நான் மற்றவர்களைப் பற்றி பேசுவதென்றால் அவர்களின் நல்ல பண்புகளை எடுத்துரைப்பேனே அன்றி, ஒருபோதும் குற்றங்களை கூறுவதில்லை.

கென்னடி


1. ஏடுகளில் உள்ள கடுஞ் சொற்கள் அறிவை வளர்க்கும், பெரியோர்களின் கடுஞ்சொற்கள் நல்வாழ்வை வளர்க்கும்.

ஆவ்பரி


1. விதியானது ஒரு கதவை மூடும்போது நம்பிக்கையானது இன்னொரு கதவைத் திறக்கிறது.
2. கொள்கையில் நம்பிக்கை வேண்டியதுதான், ஆனால் அது குருட்டுத்தனமாக இருக்கக் கூடாது.