உலக மொழிகள்


1. கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல. அதிகம் ஆசை படுபவன் தான் ஏழை – ஸ்பெயின்
2. எதையும் தெரிந்து வீணாக்கும் பழக்கம், விரைவில் அதையே தேடி அலைய வைக்கும் – ஸ்காட்லாந்து
3. பயந்தகோலி பத்து தைரியசாலிகளையும் கோழையாக்கி விடுவான் – ஜேர்மன்
4. தூக்கி எறியும் குதிரையை விட சுமந்து செல்லும் கழுதையே மேல் – ருமேனியா
5. பேசுகிறவனை விட கேட்பவனுக்கே அதிக புத்தி வேண்டும் – துருக்கி

6. உன்னை யாராவது ஒரு தடவை மோசடி செய்தால் அது அவன் தவறு. மறுதடவை மோசடி செய்தால் அது உன் தவறு - ருமேனியா பழமொழி.
7. பேசாத வார்த்தைக்கு நீ எஜமான், பேசின வார்த்தைகள் உனக்கு எஜமான் - ஆங்கிலப பழமொழி.
8. பணத்தை வைத்திருப்பவனுக்கு பயம், அது இல்லாதவனுக்கு கவலை - பாரசீகம்.
9. காதல், புகை, இருமல், பணம் இவைகளை நீண்ட காலம் மறைக்க முடியாது - பிரான்ஸ்.
10. பணத்திடம் நம்பிக்கை வைக்காதே, நம்பிக்கையிடம் பணத்தை போட்டுவை - ஈரான்.

11. கொஞ்சம் நட்பை இழப்பதைவிட கொஞ்சம் பணத்தை இழப்பது மேல் - மடகாஸ்கர்.
12. புதுப் பணக்காரனிடம் கடன் வாங்காதே, புதுமணத் தம்பதிகளின் வீட்டிற்குச் செல்லாதே - மலேசியா.